Wednesday, November 21, 2012


ஆஹா... வந்துடுச்சிடா ஒரு ஜாதிக்கலவரம்.. என்று மகிழ்ச்சியுடன்  கல்லாக்கட்டக் கிளம்பி விட்டார்கள் அனைத்து முற்போக்குகளும்..
பொய்களை மட்டுமே எழுதிப் பிழைப்பு நடத்தும் பத்திரிகைகளும் டி.ஆர்.பி ரேட்டிங்கைத் தவிர மற்ற எவனைப்பற்றியும் கவலைப்படாத தொலைக்காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு வழக்கம்போல் கொம்பு சீவத்தொடங்கிவிட்டனர்.

இந்த ஊடகங்கள் ஊதித்தள்ளும் பொய்களை நம்பிக் கொண்டு உண்மையான நடுநிலைவாதிகளும் கவலை முகங்களோடு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று ஜாதி ஒற்றுமைப் புராணம் பாடத் தொடங்கி விட்டார்கள்.

தருமபுரியில் கலவரம் 300 குடிசைகள் சாம்பல் என்று முதல் முதலில் பொய்ப்பரப்புரையை தொடங்கி வைத்த ஊடகம்.. உலகப் புகழ் பெற்ற புதிய தலைமுறைதான். புதிய தலைமுறை பொய் சொல்லுமா? என்று குறுக்குக் கேள்வி கேட்பவர்களுக்கு அது இந்த விசயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைக் கடைசியாகச்சொல்கிறோம்.

300 குடிசைகள் எரிப்பு 50 வாகனங்கள் எரிப்பு என்று இடைவிடாமல் பிரச்சாரம் செய்தது புதிய தலைமுறை. மற்ற செய்திகளை சேகரிப்பது போல சம்பவம் (கலவரம்) நடந்த இடத்திற்கு தனது நிருபரை அனுப்பி நேரடிக் காட்சியாகக் காட்டியதா புதிய தலைமுறை என்றால் இல்லை.
உடனடியாகத்தான் காட்டவில்லை பிறகாவது காட்டியதா என்றாலும் இல்லை.

மறுநாள் தினசரி பத்திரிகைகளும் அதனதன் விருப்பத்திற்கு எண்ணிக்கையைக் கூட்டிக் குறைத்து செய்திகளை வெளியிட்டு பெரிய கலவரம் நடந்துவிட்டதாக பிரச்சனையைக் கூர்தீட்டி விட்டன. இப்படி எழுதிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இருதரப்பு நியாயங்களையும் வெளியிட்டதா என்றால் இல்லை. ஒரு தரப்பு செய்தியை மட்டும் கூட்டியும் குறைத்தும் வெளியிட்டுக்கொண்டிருந்தன.

அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற காதல் திருமணத்திற்கு நவம்பர் 7ஆம் தேதி (ஏறக்குறைய 23 நாட்கள் கழித்து) பெண்ணின் தகப்பன் தற்கொலை செய்துகொள்ளவேண்டிய காரணம் என்று யாரும் கேட்கவும் இல்லை. சொல்லவும் இல்லை. இதில்தான் நமக்கு  சந்தேகம் ஏற்பட்டது.
இன்னொன்று, சில மாதங்களுக்கு முன்பு நெற்றிக்கண் பத்திரிக்கையில் தருமபுரியில் விடுதலைச் சிறுத்தைகளின் பாலியல் அராஜகங்கள் என்று ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியினை வெளியிட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள், மூன்று சுமோ வாகனங்களில் சென்று நெற்றிக்கண் அலுவலகத்தைத் தாக்கினார்கள் என்று நண்பர் ஓருவர் கூறியது, தருமபுரியில் ஏதோ நடக்கிறது என்ற சந்தேகத்தை நமக்கு வலுவாக்கியது.

தர்மபுரிக்கு  புறபட்டார்கள்   எம்   தோழர்கள்.. .
தர்மபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 9ஆவது கிலோமீட்டரில் மெயின் ரோட்டிலேயே உள்ளது நாயக்கன் கொட்டாய் கிராமம். அங்கிருந்து இடதுபக்கம் சாலைக்குள் நுழைந்த உடனேயே உள்ளதுதான் நத்தம். 144 தடை உத்தரவு உள்ளதால் காவல்துறை கெடுபிடி அதிகம். உள்நுழைந்தவுடனேயே ஒரு வேன் எரிந்த நிலையில் (இடது பக்கம்) இருந்தது. மூன்று இருசக்கர வாகனங்கள் எரிந்த நிலையில் கிடந்தன. சில சைக்கிள்களும் எரிந்து குவியலாகக் காணப்பட்டது. அந்த பகுதி வீடுகள் சேதமடைந்து காணப்பட்டன. ஓடுகள் உடைந்த நிலையில் இருந்தன. வீடுகளுக்கு முன்புறம் இருந்த ஓலைக் கொட்டகைகள் எரிந்த நிலையில் இருந்தன ஒரு மாட்டுக் கொட்டகை எரிந்த நிலையில் எலும்புக் கூடாகக் காட்சியளித்தது. அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சமியானா பந்தல் போடப்பட்டு சிலர் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். சில கட்சிக்காரர்கள் அந்தப் பகுதியில் அனைவரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தனர். சில பெண்களிடம் விசாரித்தபோது எங்க காலனி பையன் அந்த சாதி பொண்ண கட்டிக்கிட்டதால எங்க வீட்ட எல்லாம் கொளுத்திட்டாங்க என்று சொன்னார்கள்.
இவர்கள் சொல்வது எல்லாம் எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளியாகி விட்டது என்பதால் இனி விசாரிப்பதற்கு ஒன்றுமில்லை என்று முடிவெடுத்து கலவரம் நடத்தியதாகக் கூறப்பட்ட செல்லங்கொட்டாய் கிராமத்திற்குப் புறப்பட்டோம். நத்தம் பகுதியைத் தாண்டியவுடனேயே ஒரு கிலோமீட்டருக்கும் கொஞ்சம் குறைவான தூரத்தில் உள்ளதுதான் செல்லங்கொட்டாய். முதலில் ஒரு தொடக்கப்பள்ளி நம்மை வரவேற்றது. அதனைத் தொடர்ந்து மொத்தமே 10க்கும் குறைவான வீடுகளே இருந்தன. அதுதான் செல்லங்கொட்டாய். (பின்னர் விசாரித்ததில் தற்கொலை செய்துகொண்ட நாகராஜூம் அவரது உறவினர்களும் மட்டுமே வாழுமிடம் செல்லங்கொட்டாய் என்பதை தெரிந்து கொண்டோம்).

அனைத்து வீடுகளும் பூட்டிக்கிடந்தன. இரண்டு இடங்களில் தலா ஐந்து காவலர்கள் பாதுகாப்புக்கு உட்கார்ந்திருந்தனர். ஒரு வீட்டில் மட்டும் இரண்டு வயதான பாட்டிகள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது சரியான பதிலைச் சொல்லவில்லை. உங்களை காவல்துறை கைது செய்யவில்லையா எனக் கேட்டதற்கு எங்களை கைது செய்து என்ன செய்யப் போகிறார்கள். அப்படிக் கைது செய்தால்தான் செய்துவிட்டுப் போகட்டும் போப்பா என்றனர். வேறு யாரையயல்லாம் கைது செய்திருக்கிறார்கள் என்று கேட்டதற்கு பள்ளிக்கூடத்துப் புள்ளைகளை எல்லாம் புடிச்சுட்டுப் போய்ட்டாங்க அவங்களை மட்டுமாவது விட்டா அவங்களுக்குப் புண்ணியமாப் போவும் என்றார்கள். வேறு சரியான விபரங்கள் அவர்களிடம் கிடைக்கவில்லை. இதற்கு மேல் இங்கு இருப்பது வீண் என்று கருதி இடத்தைக் காலி செய்தோம்.

அடுத்தது கலவரத்தால் பாதிக்கப்பட்ட அண்ணா நகர் பகுதிக்கு சென்றோம். நத்தம், செல்லங்கொட்டாய் பகுதிக்கு இணையாக சிறிது தொலைவிலேயே இருந்தது அண்ணாநகர். .அண்ணாநகரும் கலவர பூமியாகக் காட்சியளித்தது.

நாம் எதிர்பார்த்து வந்ததுபோல் எந்த செய்தியும் கிடைக்கவில்லை. யாரும் வாயைத் திறக்கவில்லை. மறுநாள் தொடரலாம் என்று அன்று அத்துடன் விட்டுவிட்டோம்.

கலவரம் நடந்த இந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் நம்மை யார் என்று காட்டிக்கொள்ளாமல் மெதுவாக நுழைந்து சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். சிறிது நேரத்திற்குப் பின் இயல்பாகப் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் வெளியிட்ட தகவல்கள் தான் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரே தகவலை பலரிடமும் கேட்டு உறுதி செய்துகொண்டோம்.

அதாவது பத்திரிகைகள் சொல்வது போல தர்மபுரி காதல் கலவரத்தை நாம் புரிந்து கொள்ள சற்று முன்னோக்கிப் பார்த்தால்தான்  சரியாக இருக்கும்.
சம்பவங்களை சுருக்கமாகக் கொடுத்துள்ளோம். தேவை கருதி சிலரின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலரின் பெயர்கள் அப்படியே பயன்படுத்தியுள்ளோம். அது ஏன் என்பது படிக்கும்போது உங்களுக்கே விளங்கும்.

இந்தக் கலவரத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.

ஆமாம், கருணாநிதி ஆட்சியில்தான் இந்த மாவட்ட எஸ்.பி.ஆக சுதாகர் என்ற (தலித்) ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தனக்கு கீழே உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களாக தலித் சமுதாயத்தினரையே நியமித்துள்ளார். இதனால் இந்தப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் நன்கு வளர்ச்சி அடைய வழி ஏற்பட்டுள்ளது. தங்கள் சமூகத்தினர் காவல் அதிகாரிகளாக இருக்கும் தைரியத்தில் இந்தப் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் சற்று அதிகமாகவே கொட்டமடித்திருப்பது சில சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது.

கம்பைநல்லூர் பிரச்சனை
தருமபுரி நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது கம்பைநல்லூர் கிராமம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு தனது ஆசிரியர் மற்றும் ஊராட்சித் தலைவர் (மாரியப்பன்) ஆகியோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார். தனது கைகளில் முட்டையோடு வந்த ஒருவன் அந்த மாணவியின் மார்பில் அந்த முட்டைகளை மோதி உடைத்துவிட்டு  உயர்சாதிக்காரி மேல முட்டைய உடைச்சா உடையுமா உடையாதான்னு பாத்தேன் என்று சொல்லி இருக்கிறான். இதனைப் பற்றி முறையிட்டால் தங்கள் மீதே வன்கொடுமைச் சட்டம் பாயும் என்ற பயத்தில் விட்டு விட்டார்கள்.

கடைக்குப் போய் ஏதோ பொருள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சிதா என்ற மாணவியை நடு ரோட்டிலேயே வழி மறித்து தாடையில் கடித்திருக்கிறான் சுப்பிரமணி என்பவன். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவனை அடித்து துரத்திவிட்டிருக்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற ரஞ்சிதாவின் அப்பா பழனி மற்றும் உடன் வந்தவர்கள் மீதே வன்கொடுமை வழக்கைப் போட்டு தன் சாதிப்பாசத்தை காட்டியிருக்கிறார் எஸ்.பி சுதாகர்.

தெருவில் தனியாகப் போகும் மாணவிகள் முன்பு பேண்ட்டை அவிழ்த்து விட்டு நிற்பார்களாம். இதனால் பல பெண்கள் தங்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டிருக்கிறார்கள்.

ஜெ.பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த மணி என்பவன் பஸ்சில் சென்ற விஜயா என்ற மாணவியை உரசி காலை மிதித்திருக்கிறான். சில அசிங்கமான வார்த்தைகளைப் பேசி இருக்கிறான். பேருந்தில் இருந்தவர்கள் தலைகுனிந்துகொள்ள, மாணவி விஜயா அழுதுகொண்டு ஓடி வீட்டில் சொல்லி இருக்கிறார். மறுநாள் விஜயாவுடன் அவரது அண்ணன்களும் பேருந்தில் வந்திருக்கிறார்கள். அன்றும் தனது சேட்டையை மணி ஆரம்பிக்கவே அவனை அடித்து இழுத்துப்போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து திரண்டு வந்த மணியின் உறவினர்கள் பேருந்தை தடுத்து அடித்து உடைத்திருக்கிறார்கள். பேருந்தில் இருந்த விஜயாவை பார்த்து அசிங்கமாகப் பேசி இருக்கிறார்கள்.

ஜெ.பாளையத்திற்கு வந்த விஜயாவின் உறவினர்களுக்கும் மணியின் உறவினர்களுக்கும் பேச்சு முற்றி கலவரம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் போலீஸ் படையை ஏவிய எஸ்.பி. சுதாகர் விஜயாவின் உறவு சாதியினரை அடித்து நொறுக்கி இருக்கிறார். அடிதாங்காமல் அவர்கள் சிதறி ஓட, கையில் கிடைத்தவர்களை ஜெயிலில் தள்ளி 14 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் போட்டு இருக்கிறார். இந்த கலவரத்தில் மாதையன் என்பவர் காணாமல் போக, மறுநாள் (21.10.2011) ஒரு கிணற்றில் பிணமாகக் கிடந்திருக்கிறார் மாதையன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மாதையன் அடித்துக் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
(இந்த செய்திகள் நக்கீரன் இதழில் வெளியாகி உள்ளது ).

இதே கம்பைநல்லூர் காவல்நிலைய ஏட்டு சாகுல் செரீப். இவரது மகளிடமும் இவர்கள் தங்கள் லீலைகளைத் தொடங்க  அவர் தனது வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்று தன் மகளைக் காத்துக் கொண்டிருக்கிறார்.
 மூன்று வருடங்களுக்கு முன்பு அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகள் காணாமல் போனது. அந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறி பா ஒன்றியச் செயலாளர் ஒருவர் உட்பட 10 பேரை காவல்துறை கைது செய்து சித்திரவரை செய்திருக்கிறது. கடைசியில் அந்த குற்றத்தை செய்தவர்கள் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டு இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இப்படி குறிப்பிட்ட சாதி மக்கள் மீது வீண் பழி சுமத்தி சித்திரவதை செய்ததற்கு மேற்கண்ட எஸ்.பி.சுதாகர்தான் காரணமாம்.

 சவுக்குத்தோப்பு பிரச்சனை
தற்போதைய கலவர பூமியான நாயக்கன்கொட்டாய்க்கு இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பு இருக்கும் இடம்தான் சவுக்குத் தோப்பு என்ற பகுதி. இங்கு 40 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் சில குடும்பத்தினர் மளிகைக் கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இதில் 65 வயது கோவிந்தன் என்பவரும் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்திருக்கிறார். இந்தப் பகுதிக்கு மிக அருகில்தான் வெள்ளாளப்பட்டி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தை அமைப்பாளர் ராஜா என்பவர் (45 வயது) உள்ளூர் தாதா போன்று இந்தக் கடைகளில் பொருட்களை மிரட்டிப் பறித்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.  இந்தப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் அதிகம் என்பதால் அவர்கள் விருப்பப்படி செயல்பட்டு வந்துள்ளனர்.

ஒருநாள் சரியான போதையில் வந்த ராஜூ கோவிந்தனின் கடையில் இருந்து பொருட்களை அள்ளிச் செல்ல முயன்றிருக்கிறார். அதை தடுக்க முயன்ற கோவிந்தனை கடையிலிருந்து இழுத்து வெளியே தள்ளிவிட்டு கடையில் இருந்த பாட்டில்களை எடுத்து தெருவில் வீசி உடைத்திருக்கிறார். இதைக் கண்டு கொதிப்படைந்த கோவிந்தன் ராஜூவைப் பிடித்து கீழே தள்ளியிருக்கிறார். கீழே விழுந்த ராஜூ தலையில் கல் மோதி அங்கேயே இறந்துவிட்டார்.  பிறகு காவல்துறை கோவிந்தனை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டது.

மேலும் ஏதும் கலவரம் நிகழ்ந்துவிடாமல் தடுக்க அந்த கிராமத்தில் 10 காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து 13.5.2011 அன்று வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த 20 விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் வந்து மளிகைக் கடைகளையும் பெட்டிக்கடைகளையும் தாக்கி சூறையாடிவிட்டு அங்கு இருந்தவர்களையும் தாக்கி உள்ளனர். இதில் சுரேஷ் என்ற மாணவன் முதுகு எலும்பு நொறுங்கி ஒரு மாத காலம் தனியார் மருத்துமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இன்னொருவருக்கு காது சவ்வு கிழிந்துள்ளது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அமைதிக்குழு ஒன்றை போட்டு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று அமைதிக்குழு கூறியதை அடுத்து அனைத்து கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டுவிட்டன. விடுதலைச் சிறுத்தை கொடிக்கம்பத்தைத் தவிர,

அந்த கொடிக்கம்பத்தில்தான் மாலை நேரங்களில் விடுத்லைச் சிறுத்தைகள் அமர்ந்துகொண்டு வழியில் போய்வரும் பெண்கள் மீது காகித ராக்கெட் விடுவது ஆபாசமாக பேசுவது போன்ற வேலைகளைச் செய்துள்ளனர்.

மீண்டும் சாதிக்கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து அனைவரும் திரண்டு சென்று தாசில்தாரிடம் கொடி மரத்தை அகற்றப் போகிறீர்களா இல்லையா என முறையிட்டபிறகு அரசு ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.

இப்படி கருணாநிதி அரசு. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடும் சிறுத்தைகளை ஈவ் டீசிங் வழக்கில் கைது செய்யாமல் அமைதிக் குழு ஏற்படுத்தி சமாதானப்படுத்தி வந்துள்ளதால் அவர்களுக்கு துளிர் விட்டுப் போய் விட்டது.

நாளொரு வன்முறையும் பொழுதொரு பிரச்சனையுமாக வளர்ந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் பற்றி இனி வரப்போவதுதான் ஹைலைட்..
அதாவது பள்ளி கல்லூரி மாணவிகளைக் காதலிப்பதுபோல் நடித்து எங்காவது அழைத்துச் சென்று பத்து பதினைந்து நாட்கள் வைத்திருந்துவிட்டு, பெண்ணின் பெற்றோர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பேரம் பேசி சில லட்சங்களைக் கறந்துகொண்டு பெண்ணை திருப்பி அனுப்பிவிடுவது இவர்களது தொழிலாக இருந்து வந்துள்ளது. இதில் பணம் கொடுத்து பெண்ணை மீட்டவர்கள் தன் மகளின் எதிர்காலம் பாழாகிவிடக்கூடும் என்பதால் காவல் நிலையத்திற்குப் போவதில்லையாம்.

சம்பவம் 1. நல்லாம்பள்ளியிலிருந்து சேலம் போகும் வழியில் 3ஆவது கிலோமீட்டரில் உள்ளது கெங்கலாபுரம். அங்கு வருவாய்த்துறையில் வேலை பார்க்கும் ஒருவரின் (செட்டியார் பிரிவைச் சேர்ந்தவர்) மகளை காதல் ஆசைகாட்டி கூட்டிப்போய் குடும்பம் நடத்திவிட்டு உன் அப்பனிடம் போய் 3 லட்சம் பணம் வாங்கி வா என்று திருப்பி அனுப்பி விட்டான் ஒருவன். தன் வீட்டிற்கே துரத்தப்பட்ட அந்தப் பெண் உறவினர்களின் ஏளனப் பேச்சு தாளாமல் சாப்பிடாமல் கிடந்து உயிரை விட்டிருக்கிறார்
அந்தப் பெண்ணை அவரது அப்பாதான் கொன்றுவிட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகளில் ஒரு கோஷ்டினர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதுதான் இதில் கொடுமை.

சம்பவம் 2. இதே நல்லாம்பள்ளியைச் சேர்ந்த 17 வயதுப் பெண் ஒருவரை அழைத்துச் சென்று வைத்துக்கொண்டு பேரம் பேசியுள்ளது இந்தக் கும்பல். பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுப் போட்டு தன் பெண்ணை மீட்டுள்ளார்.

சம்பவம் 3. கம்பைநல்லூர் பிரச்சனை முடிந்து 8 மாதங்கள் கழித்து  நடந்த சம்பவம் இது.
கடத்தூர் அருகே புதுரெட்டியூர் என்ற பகுதியைச் சேர்ந்த (நாயுடு சமூகத்தைச் சேர்ந்த) மாணவி ஒருவரை விடுலைச் சிறுத்தையைச் சேர்ந்த ஒருவன் தன்னை காதலிக்குமாறு 6 மாதகாலமாக விரட்டியுள்ளான்

தொடர்ந்து அவனைக் காதலிக்க மறுத்து வந்த அந்த மாணவியை ஒருநாள் மாலை டியூசன் சென்று வீடு திரும்பும்போது 3 பேர் சேர்ந்த வி.சி.கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த மாணவியைக் காப்பாற்றுகின்றனர். காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது தலித் காவலர்கள் சிலர் பெண்ணின் மானம் போய்விடும் என்று மிரட்டி புகாரை வாங்காமல் அனுப்பி விட்டனர். மறுநாள் அந்த பெண்ணின் உறவினர்கள் உட்பட 200 பேர் எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்த பெண் கடத்தல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

மறுநாளே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்த மாணவியின் பெற்றோர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ச்சியாக தன் இவர்கள் மீது புகார் வந்தும் எஸ்.பி.சுதாகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பவம் 4. நல்லம்பள்ளி என்ற பகுதியில் உள்ள அனுப்பிரியா என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான் ஒருவன். அந்த மாணவியும் தொடர்ந்து மறுக்கவே. ஒருநாள் மாலை தன் அத்தையுடன் மில்லுக்கு சென்று வரும் வழியில் மூன்று பேர் கொண்ட வி.சி.கும்பல் வழி மறித்து அவள் கைகளை பின்னால் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவளுடன் சேர்ந்து நின்று போட்டோ எடுத்திருக்கிறான் அந்தப் பொறுக்கி. அவள் அவனை திருப்பி அறைந்து விடுகிறாள். அதனால் கோபமடைந்த அந்தக் கும்பல் அந்த மாணவியின் சுடிதாரைக் கிழித்து அடித்துவிட்டு போய்விடுகிறார்கள். அவர்களைத் தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையையும் அடித்துவிடுகிறார்கள். மறுநாள் காலை அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது  விடுதலைச் சிறுத்தையைச் சேர்ந்த முக்கியமான இருவரின் பெயரை நீக்கிவிட்டு மற்றவர்களை கைது செய்கின்றனர் சந்தனபாண்டி என்கிற தலித் டி.எஸ்,பி மற்றும் அசோக்குமார் என்னும் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும்.

பொதுவாக காதல் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகளில் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. காரணம், கட்டப்பஞ்சாயத்தில் கிடைக்கும் பணத்தில் அவர்களுக்கும் ஒரு பங்கு போவதாகும்.

பாலக்கோடு என்ற இடத்தின் அருகே இதே போல் ஒரு சம்பவம்; அதில் பெண்ணை பணம் கொடுத்து மீட்டுக்கொள்வதாக அழைத்த பெண்ணின் உறவினர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட போலீசார் உள்ளிட்ட கும்பலை அடித்து துரத்தி விட்டு பெண்ணை மீட்டுச் சென்றதாகவும் பேசிக்கொள்கிறார்கள். அடி வாங்கியவர்கள் கப் சிப்.

தற்போதைய கலவரமும் உண்மை நிலவரமும்:
செல்லங்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் கவுண்டர் என்வருக்கு ஒரு மகள் (திவ்யா) ஒரு மகன் (மணி). இவர் மனைவி தேன்மொழி.
இந்த திவ்யா அருகில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து வரும் வழியில் உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளவர் இளவரசன் (கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வாகி உள்ளாராம்). இவர் திவ்யாவைக் காதல் வலையில் விழ வைத்துள்ளார். சில இடங்களுக்கும் இருவரும் சுற்றி உள்ளனர். திவ்யாவின் தந்தை நாகராஜ் தன் மகள் மீது ஏகப்பட்ட பாச மழை பொழிந்துள்ளார். பத்து ரூபாய் கேட்டால் 100 ரூபாய் கொடுப்பாராம். அந்த அளவுக்குப் பாசம்.

இளவரசன் திவ்யா காதல் கதை தெரியவர நாகராஜ் கண்டித்துள்ளார். திவ்யாவும் இனி மேல் அப்படி செய்யமாட்டேன் என சத்தியம் செய்து தந்திருக்கிறார். தன் மகளின் பேச்சை நம்பி விட்டார் நாகராஜ். இந்நிலையில்  இவர்கள் ஓடிப்போகும் முதல்நாள் (அக்டோபர் 13ம் தேதி, சனிக்கிழமை) கல்லூரிக்கே சென்று இளவரசனின் உறவுப் பெண் ஒருவர் திவ்யாவை சந்தித்துப் பேசி இருக்கிறார்.

மறுநாள் திவ்யா இளவரசனுடன் சென்று விட்டார்.

முதலில் தனது மகள் காதல் மணம் புரிந்து விட்டாள் என்று விட்டுவிட்டார் நாகராஜ்.
பிறகு தான் வி­யம் புரிந்துள்ளது. கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் நாகராஜிடம் தூது விட்டு உன் மகள் பத்திரமாக இருக்கிறாள். 2 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் உன்னிடமே ஒப்படைத்து விடுகிறோம் என்று மறைமுகமாக பேரத்தில் இறங்கியுள்ளது. விபரீதம் அறிந்த நாகராஜ் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்தப் பகுதிக்கான காவல்நிலையம் நாயக்கன் கொட்டாய்க்கு மிக அருகிலேயே உள்ள கிருஷ்ணாபுரம் காவல் நிலையம். அங்கு எஸ்.. ஆக இருப்பவர் பெருமாள் (தலித் சமூகத்தைச் சேர்ந்த இவரை இந்தப் பகுதி விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் ஒன்றியச் செயலாளர் என்றே அழைக்கிறார்கள்) இவரிடம் சென்று முறையிட்டவுடன் தான் பிரச்சனை சூடு பிடித்துள்ளது.

எஸ்..பெருமாளும் விடுதலைச் சிறுத்தை பொறுப்பாளர்கள் 6 பேரும் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்தை தொடர்ந்து உள்ளார்கள். இந்தப் பஞ்சாயத்து தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதனால் இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் இந்த செய்தி தெரிய வந்துவிட்டது. பெண்ணின் தந்தை நாகராஜ் பல இடங்களில் பணம் கடனாகக் கேட்டுள்ளார். மனைவி தேன்மொழியும் தன் தந்தை வீட்டிலிருந்து ரூபாய் 50,000 வாங்கி வந்துள்ளார்.

இதற்கிடையில் பெண்ணையும் பையனையும் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையப்பனூர் மலையடிவாரத்தில் தான் ஒளித்து வைத்திருக்கின்றனர். தன்னை வைத்து இளவரசன் பணம் கேட்பதை அறிந்து கொண்ட திவ்யா தன் பெற்றோரிடம் வருவதற்கு சம்மதித்து விட்டார். இந்த பேச்சு வார்த்தைக்கு திவ்யாவின் பெரியம்மா, அம்மா உள்ளிட்ட பெண்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளார்கள். செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் எடுத்து வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜருகு என்னும் பகுதிக்குச் செல்லும் பாதையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது அப்போது எஸ்..பெருமாள் 7 லட்சம் பணம் கொடுத்தால் பெண்ணை திருப்பி அனுப்பி விடுவதாக கூறியிருக்கிறார். அப்போது திவ்யா அழுதிருக்கிறார். முடிவில் எஸ்.. பெருமாள் தலைமையிலான கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் 7ஆம் தேதி பெண்ணை ஒப்படைப்பதாக உறுதி கொடுத்துவிட்டார்கள். தன் பெண்ணை மீட்டு வந்த பிறகு ஒரு மாதம் கழித்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கர்நாடகப் பகுதியில் உள்ள தன் உறவினர் ஒருவரின் மகனுக்குப் பேசி வைத்துவிட்டார் நாகராஜ்.

இந்நிலையில் பெண்ணின் உறவினர் ஒருவரே திவ்யாவிற்கு போன் செய்து நீ திரும்ப வந்தால் உன் அப்பா உன்னை கொலை செய்துவிடுவார் என்று சொல்லி விட்டார். இதனால் பயந்து போன திவ்யா தந்தையுடன் போக மறுத்து எஸ்.பி.அஸ்ரா கர்க்கிடம் தஞ்சம் அடைந்துவிட்டார். இப்போது எஸ்.பிக்கு பெருமாள் செய்த கட்டப்பஞ்சாயத்து லீலைகள் தெரிந்து விட்டன.

தான் நடத்திய கட்டப்பஞ்சாயத்து எஸ்.பி வரை போய்விட்டதே என்ற கோபத்தில் இருந்த பெருமாளிடம் சென்று ஒப்புக்கொண்டபடி தன் மகளை ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறார் நாகராஜ். அதற்கு பெருமாள் அவரை அசிங்கமாக பேசி ஏன் தலித்திற்கு உன் பெண்ணைக் கட்டி வைத்தால் பிள்ளை பிறக்காதா என்று ஏளனம் செய்து அனுப்பி விட்டாராம்.

தன் குடும்ப மானம் போய், பணத்தையும் இழந்து தன் பெண்ணின் வாழ்க்கையும் இப்படி சீரழிந்து விட்டதே என்று நொந்து போய் வீட்டிற்கு வந்த நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

நாகராஜ் தூக்கில் தொங்கி செத்துப்போன செய்தி காட்டுத்தீயாய் பரவவே.. இதற்கு முன் நடந்த பேரங்களை அறிந்திருந்த சுற்றியுள்ள கிராமத்தினர் திரண்டுள்ளனர். இதனால் பயந்து போன நத்தம் பகுதி தலித் மக்கள் தலைமறைவாகி  விட்டனர். எஸ்.. பெருமாளும் தலைமறைவாகிவிட்டார்.
நாகராஜின் பிணத்தை தூக்கிக்கொண்டு வந்த அவரது உறவினர்கள் இளவரசனின் வீட்டின் முன் கிடத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அப்போது உணர்ச்சி வசப்பட்ட சிலர் இளவரசனின் வீடு உட்பட அந்தப் பகுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கு இருந்த வாகனத்திற்கும் தீ வைத்துள்ளனர். அப்போது காவல் துறை வந்துவிடவே தீ வைத்துக் கலவரம் செய்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

நாகராஜ் குடும்பத்தினர் உட்பட மற்றவர்கள் மெயின் ரோட்டில் சடலத்தை கொண்டுவந்து கிடத்தி சாலை மறியல் செய்துள்ளனர். நாகராஜ் மனைவி தேன்மொழி உள்ளிட்ட அனைவரும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட அந்த ஏழு பேரும் தான் நாகராஜின் தற்கொலைக்குக் காரணம் அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த சாலையில்  செங்கல்மேடு என்ற இடத்தில் 4 மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர். சற்று நேரத்தில் 2000 காவல்துறையினரை கொண்டு வந்து இறக்கிய கிருஷ்ணகிரி எஸ்.பி., அசோக்குமார் அவர்களை அமைதிப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறேன் என்று உறுதி கூறி நாகராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டார்.

அதே நேரத்தில்தான் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொண்டம்பட்டி தலித் வீடுகள் சேதமாகி உள்ளன. இவர்கள் அனைவர் மீதும் வழக்குப் போட்டு கைது செய்யுமாறு கலெக்டர் லில்லி (தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்) அதிரடி உத்தரவு இட்டுள்ளார் அன்று இரவோடு இரவாக காவல்துறையை ஏவி ஒவ்வொரு வீடாகப் புகுந்து அனைவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. அன்று கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் 90 பேர்.

மறுநாள் பத்திரிகைகள் இதனை பெரிய செய்தியாக்க, கலெக்டர் லில்லி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 5,000 உடனடியாக வழங்குவதாக அறிவித்தார். இதன் மூலம் நாகராஜின் மரணம் அமுக்கப்பட்டு தீவைப்பு செய்தி பெரிதுபடுத்தப்பட்டது. கலெக்டர் லில்லி இந்த வி­யத்தில் தீவிர ஆர்வம் செலுத்தினார். காவல்துறையினரிடம் மிகக் கடுமையாக நடந்துகொண்டார். அனைவரையும் கைது செய்ய அழுத்தம் கொடுத்தார். முதல்நாள் இரவு 12ஆம் வகுப்பு படிக்கும் நாகராஜின் மகனையும் கைது செய்ய முயன்றுள்ளது காவல்துறை. அங்குள்ள பெண்கள் காவலர்களிடம், செத்துப்போனவர் இவன் அப்பா தான், இவனை மட்டுமாவது விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி விடுதலை செய்துள்ளனர்.

அன்று இரவு காவல்துறையினர் மாஜிஸ்ட்ரேட்டிடம் கைது செய்தவர்களை முன்னிறுத்தியபோது தேன்மொழி கட்டப்பஞ்சாயத்து பணப்பரிவர்த்தனை குறித்து எதுவும் கூறாமல் தவிர்த்து இருக்கிறார். இது எஸ்.பி அஸ்ரா கர்க்கிற்கே ஆச்சரியமாக இருந்துள்ளது. நாம் சந்தித்த பொதுமக்களுக்கும் இதுதான் ஆச்சரியமாக கூறுகிறார்கள். அவர்கள் பணம் கேட்டதும் நாகராஜ் பணம் புரட்டிக் கொடுத்ததும் ஊரறிந்த ரகசியம், ஆனால் அதனை அவர் ஏன் மறைக்கிறார் என்று புரியவில்லை. ஒருவேளை அந்த பணப்பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட யாரோ ஒருவர் அல்லது சிலர், இவரிடம் தன் குட்டு அம்பலமாகிவிடும் என்று அஞ்சி, தெரிவிக்கக் கூடாது என்று அரசியல் செய்கிறார்களோ என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து வந்த நாகராஜ் உடலை வாங்க தேன்மொழி மறுத்துவிட்டார். என் கணவரின் மரணத்திற்கு காரணமான 7 பேரையும் கைது செய்தால்தான் உடலைப் பெற்றுக்கொள்வேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். மூன்று நாட்கள் ஆகிறது. பிணத்தை ஒப்படைத்து உடனடியாக இறுதிச் சடங்கை முடித்துவிட வேண்டும் என்று மேலிடத்திலிருந்து அழுத்தம் அதிகரிக்கிறது.  இந்த வி­யத்தில் அஸ்ரா கர்க் மிக நேர்மையாக நடந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கலெக்டருக்கும் எஸ்.பிக்கும் வாய்த்தகராறு வந்து விட்டது என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். கலெக்டரிடம் உங்கள் விருப்பத்திற்கெல்லாம் ஆட முடியாது சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கண்டிப்பாக கூறி விட்டாராம்.

எஸ்.சி. எஸ்.டி., கமிசன் வர இருக்கிறது. இந்நேரத்தில் நாகராஜின் பிணம் இருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே அவர்கள் வருவதற்குள் அவர் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எனவே ஒரு செய்தியை மக்களிடம் கசிய விடுகிறது அரசு இயந்திரம். பிணத்தை வாங்கி இறுதிச் சடங்கை முடித்துவிட்டால் கைது செய்வதை நிறுத்தி விடுவார்கள் என்பதுதான் அந்த செய்தி. இதனால் தேன்மொழியிடம் கைதுக்கு பயந்த சிலர் நமக்கு ஏன் வம்பு பேசாமல் பிணத்தை வாங்கிவிடு என்று அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள். பிணத்தை வாங்கவில்லை என்றால் நாங்களே எரித்துவிடுவோம் என்றிருக்கிறது காவல்துறை. அவர் மகன் மணியிடம் ஒருபுறம் அப்பா ஏன் அனாதைப் பிணமாக போகவேண்டும் என்று சிலர் ஊதிவிட்டிருக்கிறார்கள். எனவே அரசின் அழுத்தம் தாங்காமல் பிணத்தை வாங்கி இறுதிச் சடங்கை நடத்தி இருக்கிறார்கள்.
இறுதிச் சடங்கின்போது கூட எஸ்.பி., தேன்மொழியிடம் நாகராஜின் சாவுக்கு என்ன காரணம் என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் பெருமாள் செய்த தில்லுமுல்லுகள் வெளிவருமா என்று பார்த்திருக்கிறார்.

கலெக்டர் உத்தரவால் தினந்தோறும் கைது வேட்டை நடந்தேறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் காவல்துறையினரே கடுப்பாகிப்போகும் அளவுக்கு கலெக்டர் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

இதுவரை வீடுகளைக் கொளுத்தி விட்டார்கள் என்று புகார் கூறி வந்தவர்கள் தற்போது திருட்டு, கொள்ளை, நகைகளை காணவில்லை, பொருட்களை தூக்கிச் சென்று விட்டார்கள் என்று தற்போது புதிய புகார்களைக் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இதன்மூலம் இந்த கட்டப்பஞ்சாயத்து விசயம் மேலும் அமுங்கி சாதிக் கலவரம், திருட்டு, கொள்ளை என்று விசயம் திசை மாறிப் போயிருக்கிறது. ஊடகங்களும் தினம் தினம் ஒரு பக்கம் இரண்டு பக்கம் என்று தங்கள் பங்குக்கு விசயத்தை பெரிதாக்கி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தேன்மொழி தரப்பில் என்ன ஏது என்று கேட்கக் கூட நாதியற்றுப் போய் விட்டது. ஊடகங்கள் உண்மை அறியும் குழுக்கள் என அனைவரும் இந்தக் கலவரத்தில் நேரடித் தொடர்பில் இல்லாத இங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னம்பட்டியில் குவியத் தொடங்கிவிட்டார்கள். அங்கு உள்ளவர்கள்தான் கொள்ளை திருட்டு என்று புதிய புதிய புகார்களை அள்ளிக் குவிக்கிறார்கள்.

இட்டுக்கட்டி பொய் கூறும் மார்க்ஸ் அந்தோணிசாமி

தலித் மக்களுக்கு ஆதரவாக எழுதுவதாகக் கூறிக்கொள்ளும் தலித் அல்லாத சிலர் திட்டமிட்டு பொய்ச்செய்திகளை எழுதினர். உண்மை அறியும் குழு புகழ் மார்க்ஸ் அந்தோணி சாமி நாடார் அதில் ஒருவர்.

அந்த உண்மை அறியும் குழு சொல்லும் மிகப்பெரிய பொய் இரண்டையாவது குறிப்பிடலாம் என்று நினைக்கிறோம். 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அனைவரும் படம் பிடித்துக்காட்டுவது , இரண்டு வாகனங்களை மட்டும் தான்.




மேலும் கொள்ளையடிக்கப்பட்ட பீரோ என்று ஒரு உடைந்த பீரோவின் படத்தை காட்டியுள்ளனர். அந்த பீரோ பொன்னம்பட்டி என்ற பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும். அது பழைய இரும்பு சாமான்கள் வாங்கி விற்கும் ராஜூ என்பவரின் வீட்டிற்கு வெளியே கிடக்கும் பீரோவாகும். அதாவது பழைய உடைந்த பீரோ என்பதை எடுத்துக்காட்ட, அதன் வேறொரு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தையும் அதன் அருகில் கிடக்கும் பழைய மதுபாட்டில்கள் படத்தையும் இணைத்துள்ளோம். அதுமட்டுமன்றி அதனைச் சுற்றி மேலும் பல பழைய இரும்பு சாமான்கள் கிடப்பதைப் பார்க்க முடியும்

பச்சைப் பச்சையாய் புளுகும் கவின் மலர்..

தலித் வேடமிட்டு தமிழினத்தை பிளவுபடுத்தும் சக்திகளில் முதல் வகுப்பில் வருபவர் கவின் மலர். இவர் தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். முள்ளிவாய்க்கால் கொடுமையைவிட பெரிய கொடுமை, வாச்சாத்தியைவிட பெரிய கொடூரம் என்றெல்லாம் எழுதி தன் தலித் விசுவாசத்தைக் காட்டுகிறார். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையும் தர்மபுரி கலவரத்தையும் வாசகர்களே ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கவின்மலர் சொல்லும் இமாலயப் பொய் ஒன்றுதான் இங்கே நாம் குறிப்பிட விரும்புவது. திட்டமிட்டு ஒவ்வொரு ஊருக்கும் 1000 பேர் வந்தார்களாம் வீட்டிற்கு 50 பேர் என பொருட்களைக் கொள்ளை அடித்தார்களாம். தாங்கள் வந்த லாரியில் அந்தப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்று விட்டார்களாம்.
நாகராஜ் செத்துப்போனது மாலை 5 மணிக்கு. அதுவரை ஊரில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. யாரும் கூடவே இல்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்டுதான் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்கின்றனர். இதில் வேடிக்கை பார்க்கத் திரண்டவர்கள் தான் அதிகம். சாலையை நாகராஜ் உறவினர்கள் மறிக்க 4 மரங்களை வெட்டிப் போட்டிருக்கின்றனர். இதனால் அந்த வழியாக காவல்துறை வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியவில்லை. போக்குவரத்து சுத்தமாக நின்று விட்டது. இது நடந்தது 6 மணி, இரவு 9 மணிவரை சாலை மறிக்கப்பட்டுள்ளது. இதில் இவர்கள் எப்போது திட்டமிட்டு எப்போது வாகனம் பிடித்து சரியான சாலை வசதியற்ற பொன்னம்பட்டியில் இருந்து திருடிக்கொண்டு எப்படி வெளியில் செல்ல முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், கொஞ்சநாளுக்கு முன்பாகக் கிழிந்துபோன தனது தலித் முகமூடியை திரும்ப ஒட்டுப்போட்டுக்கொள்ள இப்படி ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுகிறார் கவின்மலர். நாகராஜ் சாகப்போகிறார் என்று முன்னமே தெரிந்து ஆயிரம் ஆயிரம் பேர்களாய் அணிபிரிந்து கொள்ளைடித்தார்களா? அதுவும் கடுமையான காவல்துறை கட்டுப்பாட்டிற்குள்?

கவின்மலரும் தினமலரும்:
ஒன்றைப் பத்தாக்கி ஊதிப் பெரிதுபடுத்திக் காட்டி வஞ்சம் தீர்த்துக்கொள்வதில் தினமலருக்கு தான் கொஞ்சமும் சளைத்தவரல்ல என்று கவின்மலர் தன்னை நிரூபிக்கிறார். அதாவது எஸ்.சி., எஸ்.டி., கமிசன் வெளியிட்ட அறிக்கைப்படியே முழுமையாக சேதமடைந்த வீடுகள் 40 தான். ஆனால் அதனை 300 வீடுகள் (குடிசைகள்) தீக்கிரை என்று தினமலர் புளுகித் தள்ளியது.

கவின் மலரோ 4 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை 42 மரங்கள் என்று கொஞ்சம் கூட தனது பேனா கூசாமல் புளுகித் தள்ளுகிறார். தர்மபுரியிலிருந்து நாயக்கன்கொட்டாய் செல்லும் சாலையில் எஸ்.கொட்டாயூர் என்ற இடத்தில் இடது புறத்தில் முதல் மரம் வெட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது அங்கிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள செங்கல்மேடு என்ற இடத்திலும் மூன்றாவது நான்காவது மரங்கள் சராசரியாக ஏறக்குறைய 500 மீட்டர் தொலைவிலும் வெட்டப்பட்டுக் கிடக்கின்றன. அந்த மரங்களை நாமும் படம் எடுத்து இக்கட்டுரையுடன் இணைத்துள்ளோம்.
இதற்கு இடையில் ஒரே ஒரு மரத்தில் கிளை ஒன்று முறிந்து தொங்குகிறது. அவ்வளவுதான். ஆனால் கவின் மலர் என்ற பொய்க்காரி இதனை 42 மரங்கள் வெட்டிப்போட்டுள்ளனர் என்று எழுதி  தனக்குப் பிடிக்காத சாதிகளின் மேல் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறார். அல்லது சாதிக்கலவரத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்.
அவர் கணக்குப்படி 42 மரங்கள் என்றால் மீதி மரங்கள் எங்கே போய்விட்டது. வேரோடு பிடுங்கிப் போட்டுவிட்டார்களா? அப்படி வேரோடு பிடுங்கி இருந்தாலும் அந்த மரத்தின் குழிகள் எங்கே போய்விட்டன?




இந்த மரங்கள் கணக்கை நாம் ஏன் இவ்வளவு விரிவாக சொல்கிறோம் என்றால். கவின் மலர் கூறும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் உடையவை என்பதை நிரூபிக்கவே.

தான் எழுதியது அனைத்தும் அக்மார்க் உண்மை என்று ஒருவேளை கவின்மலர் நிரூபிக்க விரும்பினால் மறுபடியும் அந்தப் பகுதிக்குச் சென்று குறைந்த பட்சம் 40 மரங்களையாவது அவர் காட்ட வேண்டும். இல்லையயன்றால் மற்றவர்களை எல்லாம் பிழைப்புவாதிகள் பிழைப்புவாதிகள் என்று ஓயாமல் முழங்கிவரும் கவின்மலர் இதைவிட வேறு நல்ல பிழைப்பு பிழைக்கச் சென்றுவிட வேண்டும்.

விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து எல்லா பிரச்சனைகளிலும் குறுக்குசால் ஓட்டி தமிழீழப் பிரச்சனையில் துரோகம் செய்து புகழ்பெற்ற இவர்கள் தமிழருக்குள் ஒரு பகை என்றால் வரிந்துகட்டிக்கொண்டு பொய்சாட்சி சொல்ல முன்வந்து விடுகிறார்கள். ஈழத்தமிழர்கள் தோற்றுப்போனதற்கு இவர்களின் பொய்ப்பிரச்சாரங்களும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் ஈழத்தில் சாதிப்பிரச்சனைகள் இருப்பதாக எழுதி எழுதி ஈழ ஆதரவுத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவர்களில் இவர்களின் பங்கு மகத்தானது. கார்ட்டூனிஸ்ட் பாலா போன்றவர்கள் இதில் தவறான நிலைப்பாடு எடுத்ததற்கு உள்நோக்கம் கற்பிக்கமுடியாது அவர் உண்மையாகவே தவறான புரிதலில் அந்த நிலைப்பாடு எடுத்திருக்கக் கூடும். அவரது நேர்மையைச் சந்தேகிக்கத் தேவையில்லை.

எவிடென்ஸ் என்ற அமைப்பு கலவரப் பகுதியை நேரில் கண்டு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அதில் அவர்கள் கணக்குப்படி எரிந்த குடிசைகள் என்று அவர்கள் கொடுத்த எண்ணிக்கை 60 வீடுகள் என்பதாகும்.

தினமலர் 300 குடிசைகள் என்று எழுதியது. இதைப் பற்றிக்கூட நாம் கவலைப்படத் தேவையில்லை ஏனெனில் தினமலர் உண்மையை எழுதினால்தான் நாம் கவலைப்பட வேண்டும்.

ஆனால் உண்மையின் நாயகனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையின் வில்லத்தனம்தான் இங்கு கவனிக்கத் தக்கது. சம்பவம் நடந்த உடனேயே 300 வீடுகள் 50 வாகனங்கள் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது புதிய தலைமுறை தொலைக்காட்சி. புதிய தலைமுறை பத்திரிக்கையோ நேரடியாகத் தன் நிருபரையே அனுப்பாமல் தொலைபேசித்தகவலை வைத்துக்கொண்டு கட்டுக்கதையைக் கட்டி விட்டார்கள். அதாவது, செல்லாங்கொட்டாய் என்று அந்த பகுதிப் பெயரைக்கூட சென்னாங்கொட்டாய் என்று எழுதி இருப்பதே இதற்கு சாட்சி. நிருபர் நேரடியாகச் சென்றிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காது. மேலும் ஒவ்வொரு பெட்டிச் செய்தியிலும் நாயக்கன் கொட்டாயிலிருந்து பொன்.சுகுமார் என்று பெயர் போட்டிருக்கிறார்கள். ஆனால் கட்டுரையாளர் பெயரோ .பழனியப்பன். அட்டைப்படத்தைக் கூட நாம் மேலே குறிப்பிட்ட எவிடென்ஸ் என்ற அமைப்பிடம் இருந்துதான் வாங்கியிருக்கிறார்கள்

புதிய தலைமுறை இப்படி எழுதுகிறது.

நத்தம் காலனி உள்ளிட்ட தலித் கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் பெங்களூருவுக்குச் சென்று நன்றாகச் சம்பாதிப்பவர்கள். அங்கு சம்பாதிக்கும் பணத்தின் சேமிப்பை வீடாக, மோட்டார் சைக்கிள்களாக, ஆட்டோக்களாக, தங்க நகைகளாக சொந்தக் கிராமத்தில் வைத்துள்ளனர். பொருளாதார ரீதியாக அவர்களைச் சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் ஆதிக்க ஜாதியினரின் முதன்மையான நோக்கமாக இருந்துள்ளது.
அவர்கள் கூற்று உண்மையானால் எத்தனை மோட்டார் சைக்கிள்கள் எரிந்திருக்க வேண்டும்? எத்தனை ஆட்டோக்கள் எரிந்திருக்க வேண்டும் எத்தனை புதிய வீடுகள் எரிந்திருக்க வேண்டும்? ஒரே ஒரு டாடா மேஜிக் மற்றும் ஒரு ஆட்டோ மட்டும்தான் எரிக்கப்பட்டுள்ளது. அதனை மட்டும் தான் அனைத்து ஊடகங்களும் வெவ்வேறு கோணத்தில் வெளியிட்டுள்ளனர். மூன்று மோட்டார் சைக்கிள்கள்தான் (அதுவும் இளவரசன் வீட்டு அருகில்) எரிக்கப்பட்டுள்ளது. கவின் மலர் சொல்வது போல தங்க நகைகளைத்தான் ஆதிக்க ஜாதியினர் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்? ஆட்டோக்களையும் மோட்டார் சைக்கிள்களையுமா அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள்?

புதிய தலைமுறை பத்திரிக்கையின் கணக்குப்படி கொளுத்தப்பட்ட வீடுகள் 268.

ஒரு பொறுப்புள்ள பத்திரிக்கை இவ்வளவு சென்சிடிவான பிரச்சனையை அதுவும் கவர் ஸ்டோரியை இப்படியா பொறுப்பில்லாமல் எழுதுவார்கள்?
காரணம் இருக்கிறது. நடுநிலை புதிய தலைமுறை உரிமையாளர் பாரிவேந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் இந்திய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் அவர் சார்ந்த சாதிக்கட்சி நடத்தி வருவதும் தெரியும். இதில் வெளியே பலருக்கும் தெரியாத விசயம், அதே பாரிவேந்தர் தன் சொந்த சாதிக்காக ஒரு பத்திரிக்கை நடத்தி  வருகிறார். பார்க்கவன் குரல் என்ற அந்த பத்திரிக்கையில் ஒருநாள் ஒரு விளம்பரம் வந்திருந்தது. அதில் டாக்டர் பாரிவேந்தரின் தலைமையில் திருமணம் செய்துகொள்ளும் தலித் தம்பதிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணமும் சீர்வரிசையும் தான் அளிப்பதாக அவர் கூறியிருந்தார்.
அதாவது தன் சொந்த சாதிக் கட்சியான இந்திய ஜனநாயகக் கட்சியை வளர்ப்பதற்கும், ஓட்டு வங்கியாகவும், தலித் மக்களின் ஆதரவு தேவை என்பதை புரிந்து கொண்ட டாக்டர் பாரிவேந்தர் தலித் மக்களை கவர்ந்து இழுப்பதற்காக இதுபோன்ற உதவிகளை ஒரு புறம் செய்து வருவதும். மற்றொரு புறம் வடதமிழ்நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் தலித் உள்ளிட்ட இரு சமூகங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கி அவர்கள் ஒற்றுமையைச் சீர்குலைத்து பிரித்து தனிமைப்படுத்தும் வேலையைத் தன்னால் முடிந்தவரை செய்து வருகிறார் என்பதையும் இவற்றின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வேந்தரே!

உண்மையில் என்னதான் நடந்தது என்பதை அறிந்து கொள்ள வன்கொடுமைச் சட்டத்தில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்தோம்.
அப்போது இருந்த கோபத்தில் இளவரசன் வீட்டை மட்டும்தான் அடித்து நொறுக்கினோம். அந்த இடத்தில் மட்டும்தான் தீ வைத்தோம். மற்றபடி நாங்கள் அந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலைக் கைது செய்யக் கோரி சாலை மறியல் மட்டும்தான் செய்தோம். எங்கள் கோபம் காவல்துறை மீது மட்டும்தான் இருந்தது. உணர்ச்சி வசப்பட்டு காவல்துறை வாகனங்களை மட்டும்தான் தாக்கினோம். வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது என்று மறுக்கின்றனர் மேலும் சம்பவத்திற்கு தொடர்பே இல்லாத பலரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நாகராஜ் மரணச் செய்தி கேட்டு அவரது உடலைப் பார்க்க வந்திருந்த உறவினர்களும் நாகராஜின் மகன் மணியின் பள்ளித் தோழர்களும் உள்ளிட்ட மாணவர்கள் (17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி, ஐடிஐ படிக்கும் மாணவர்கள்
1.ஜெய்சதீஷ்
2.சந்தோஷ்
3.ஆசைத்தம்பி
4.கார்த்திக்
5.தினேஷ்
6.செந்தில்
7.மணிமாறன்
8.டில்லிராஜ்
9.சந்திரசேகர்
10.அருள்
11.சபரி
12.முருகன்
13.தெய்வீகம்
14.துளசிராஜன்
15.ஸ்ரீராம் அருள்செல்வன்
16.முரளி
17.கபிலன்
18.சண்முகம்

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர் பெரியசாமி
சர்க்கரை நோயாளி அண்ணாத்துரை 
இவர்கள் எல்லோரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதிக்காரர்கள் திட்டமிட்டு இக்கலவரத்தை நடத்தியதாக எல்லோரும் கூறி வருகிறார்கள். ஆனால் இந்தக் கைதுப் பட்டியலில் மற்ற சாதிக்காரர்களும் இருக்கிறார்கள் என்பது உற்று கவனிக்கத் தக்கது. குறிப்பிட்ட இரு சாதிகளுக்கு இடையிலான மோதலாக வெளி உலகில் அறியப்பட்டாலும் பல்வேறு சாதியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது இது சாதிக்கலவரம்தானா என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது.
நாயுடு - 12
குறும்பர் - 4
செட்டியார் - 4
கொங்கு வேளாளர் - 2
வண்ணார் - 2

அவர்களின் வருத்தம் என்னவென்றால், நாங்கள் என்ன காரணத்திற்காக சாலை மறியல் செய்தோமோ அந்த காரணம் நிறைவேறவில்லை. அந்த குறிப்பிட்ட 7 பேரையும் காவல்துறை கைது செய்யவில்லை. மாறாக கட்டப்பஞ்சாயத்து கதாநாயகன் எஸ்..பெருமாளை இடமாற்றம் மட்டும் செய்து விட்டனர். நாங்கள் உள்ளே இருப்பது குறித்து கவலை இல்லை. இனியும் இந்தக் கும்பலின் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடரக் கூடாது என்பது மட்டும்தான் எங்கள் கவலை என்கின்றனர்.

நமது விடாமுயற்சியின் விளைவாக நம்மிடம் வாயைத் திறந்த சில பெண்கள் கூறியது:
மகளை இழந்து, கணவனை இழந்து, மானத்தை இழந்து பணத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்பது நாங்கள். இந்த விசயத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, எங்களைப் பார்ப்பதற்கோ என்ன நடந்தது என்று கேட்பதற்கோ யாருமே இதுநாள்வரை வரவில்லை. பிரச்சனையை அழகாக திசைதிருப்பி எங்கள் மீதே பழியைப்போட்டுவிட்டு குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். நாங்கள் நாதியற்றுப் போய் நிற்கிறோம் என்ன பாவம் செய்தோம்? என்று தங்கள் குமுறலைக் கொட்டினார்கள்.

திருமாவளவன் வேதனை.

சம்பவம் நடந்தபிறகு தருமபுரிக்கு கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு வந்த திருமாவளவன் தன் கட்சிக்காரர்களிடம் தனியாகக் கூட்டம் போட்டுப் பேசியபோது, இப்படியே எல்லா சாதிகளையும் பகைத்துக்கொண்டு போனீர்களானால் எப்படி நம்மை கூட்டணியில் இருந்து கழட்டி விடலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு நல்ல வாய்ப்பாகப் போய்விடும். நாமும் கட்சியைக் கலைத்துவிட்டுப் போய்விடவேண்டியதுதான் என்று வேதனைப்பட்டார்.

அரூரிலும் தாக்குதல்.

தர்மபுரியில் இருந்து நாய்க்கன்கொட்டாய் வழியாக 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது அரூர். சக்திவேல் என்பவர் திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு இந்த வழியாக பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது தர்மபுரி கலவரத்தை கண்டித்து எஸ் பட்டி என்ற பகுதியில் பேருந்தின்மீது கல்வீசி தாக்கியிருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தையினர். அதில் கல்லடிபட்டு சக்திவேல் (ஆதிக்க வன்னியர் சாதிக்காரர்) இறந்து போயுள்ளார். ஊடகங்கள் இந்த தாக்குதலை  திட்டமிட்டு மறைத்து விட்டன. காவல்துறையும் குற்றவாளிகளைப் பிடிக்காமல் இழுத்தடித்து வருகின்றது. இதன்மூலம் உயிர்ப்பலி ஆனவர்களும் ஆதிக்கசாதிக்காரர்களே என்பதும் தெரியவரும்.


இன்னொரு ரோமியோவுக்கு தர்ம அடி

நாயக்கன்கொட்டாய் கலவரத்திற்கு பிறகு சில பெண்களுக்கு விபரங்கள் தெரிந்து விட்டதால். தன் பின்னால் சுற்றிவந்த தர்மபுரி அம்பேத்கர் காலனியைச்சேர்ந்த ஒருவனை தன் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள் ஒரு பெண். அவனை நல்லான்பட்டி என்ற இடத்தில் (செல்லங்கொட்டாயிலிருந்து 2 கி.மீ) வைத்து அடித்து விரட்டி விட்டனர். பெண்ணின் தந்தையிடம் அந்தப் பகுதி இளைஞர்கள் வாருங்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூப்பிட்டதற்கு அவர் உங்களுக்கு பிரச்சனை வந்தால் புகார் கொடுத்துக்கொள்ளுங்கள் என் பெண் நிம்மதியாக வாழ வேண்டாமா என்று கூறிவிட்டார். இது நாம் நேரில் கண்ட அனுபவம்.

நேரடிக் கள ஆய்வில் நாம் புரிந்துகொண்ட செய்திகள் இவைதான்.

இந்தப் பகுதியில் மட்டும் ஏறக்குறைய 26 பெண்கள் இதுபோல் அழைத்துச் செல்லப்பட்டு பணம் கைமாறி மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணின் எதிர்காலம் குடும்பத்தின் மானம் கருதி பெற்றோர் இதனை காவல்துறைக்கு கொண்டு செல்வதில்லை.

ஒரு காலத்தில் நக்சல்களின் கோட்டையாக இருந்துள்ளது இந்த நாயக்கன்கொட்டாய் பகுதி இவர்களால் ஆதிக்க சாதி என்று கூறப்படும் சமுதாய இளைஞர்கள் தலித்துகளின் வீட்டில் தங்கி அவர்கள் உணவை உண்டு இயக்கம் நடத்தி இருக்கிறார்கள். பாலன் போன்றவர்களின் நினைவுச் சின்னம் நாயக்கன் கொட்டாயில்தான் இருக்கிறது. தமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய இந்த பூமி, தவறான எடுத்துக்காட்டாகிப் போனதற்கு காரணம் முன்னாள் எஸ்.பி.சுதாகர் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுத்த வரையற்ற சுதந்திரமும் அதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளும் என்பதை யாரும் மறுக்க முடியாது. (இந்த சுதாகர் தான் சென்னை, வேளச்சேரியில் வடநாட்டு இளைஞர்களை என்கவுண்டர் செய்தவர்).

எஸ்.சி., எஸ்.டி கமிசன் அறிக்கைப் படி தீக்கிரையான வீடுகள் 40 பாதி சேதாரம் அடைந்த வீடுகள் 175 ஆனால் தமிழக அரசு நிவாரணம் கொடுத்த வீடுகளோ 268.
இது எப்படி சாத்தியம்?

வருவாய் ஆய்வாளர் வீடுகளைக் கணக்கெடுக்கப்போனபோது வீடுகளுக்கு முன்புறம் இருந்த கீற்றுக்கொட்டகைகள் எரிந்ததையும் சன்னல் உடைந்ததையும் காட்டி நிவாரணம் கேட்டிருக்கிறார்கள். இதை எல்லாம் வீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்தபோது அவரை மிரட்டி உங்களுக்கு ஒன்று என்றால் செய்ய மாட்டீர்களா? எல்லாவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று மிரட்டிப் பணிய வைத்துள்ளனர். அவரும் வேறு வழியின்றி கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார்.

பா வினரின் பங்கு:

இந்தப் பிரச்சனையில் ஏதோ பாட்டாளி மக்கள் கட்சி பின்புலத்திலிருந்து செயல்படுவது போலவும் ஒரு பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் பா வினர் இந்த விசயத்தில் எதிலுமே இல்லை என்பதுதான் உண்மை. முதல் நாள் சாலை மறியல் நடந்தபோது அனைத்துக் கட்சிகளையும் சார்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.
மறுநாள்தான் வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா (பா..) கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அப்போது கலெக்டர் கண்ணெதிரிலேயே விடுதலைச் சிறுத்தைகள் ஆட்கள் அவரைத் தாக்கி மண்டையைப் பிளந்துள்ளனர். காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் மூலமே காவல்துறையும் கலெக்டரும் யார் பக்கம் உள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். கலவரம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் கூட பா.. சார்பில் யாரையும் சந்திக்கவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லை. அவர்களும் அவர்கள் பங்குக்கு கண்டன அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார்களே ஒழிய இந்த தரப்பு நியாயத்தை யாருமே தேடவில்லை.
குறிப்பிட்ட இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பா.. இந்தக் கலவரத்தை நடத்தியதாக போஸ்டர் அடித்து ஒட்டியபோது பா.. வினர் தாங்கள் செய்யாத காரியத்திற்கு தங்களை சம்பந்தப் படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டியது குறித்து சந்தோ­சப் பட்டார்களாம்.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன லாபம்

இந்த பெண் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து  வி­யத்தை திசைதிருப்பியதால் லாபமடைந்தவர்கள் விடுதலைச்சிறுத்தைகளே.

ஒன்று. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கியது.

இரண்டு. தங்களை அப்பாவிகளைப் போல் காட்டிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்துவது.

மூன்று. இனிமேல் தாங்கள் செய்யும் கடத்தல்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற துணிச்சல் பெற்றது.


நான்கு. எரியாத வீடுகளுக்கும் பாதிக்கப்படாத வீடுகளுக்கும் நிவாரணம் பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்காலம்

கொடிய அடக்குமுறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள தலித் மக்களுக்கு கிடைத்த கேடயமாகிய வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் விடுதலைச் சிறுத்தைகள் போன்றவர்கள் செய்யும் அக்கிரமங்களுக்கு கேடயமாகிப் போனது.
இதன்மூலம் இவர்கள் மாற்று (ஆதிக்க) சாதிக்காரர்களிடமிருந்து இன்னும் தனிமைப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்னும் உண்மை புரிய இவர்களுக்கு இன்னும் காலம் பிடிக்கும்.

ஆண்டான்டு காலமாய் கல்வி மறுக்கப்பட்டு சமூகத்தின் அடித்தட்டில் உழன்று வந்த தலித் மக்களுக்கு நல்ல கல்வி கொடுத்து சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து தான் வளர வைக்க முடியுமே தவிர, ஆதிக்க சாதி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் சாதிக்காரர்களின் வீட்டுப் படுக்கை அறைகளில் இவர்கள் விடுதலை ஒளிந்திருக்கவில்லை என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இவர்களின் இன்றைய வெற்றி நாளைய தோல்வியில் முடிந்துவிடும். விடுதலைச் சிறுத்தைகளால் பாதிக்கப் படப்போவது அப்பாவி தலித் மக்களே என்பதை அவர்கள் உணர வேண்டும்.

தினந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து பார்க்கும் தலைவர்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 2 லட்சம் கொடுக்க வேண்டும், 5 லட்சம் கொடுக்கவேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் கூட அரசு வழங்கட்டும். அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. வீடுகளைத் தாக்கியவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வழக்குப் போட்டு உள்ளே வைத்தாயிற்று.

தேன்மொழியின் தாலியறுத்து, அப்பாவி சக்திவேல்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் கயவர்களை தண்டிப்பது யார்?
-- 























21 comments:

Unknown said...

நீங்கள் என்னதான் உண்மையை தேடி தேடி எழுதினாலும் தமிழன் நம்பமாட்டான் அவன் என்றும் உண்மையின் உரைகல்லையே(தினமலர்) நம்புவான் எந்த மானமுள்ள அறிவுள்ள மனதில் ஈரமுள்ள மனிதனும் தர்மபுரியில் நடந்தது கலவரம் என்று சொல்லமாட்டான் இவைகளை பார்த்து போருத்துகொண்டும் இருக்கமடன் நன்றி நண்பரே

அன்பு துரை said...

Hi.. i have used your link on my blog..

http://anbu.blogspot.com/2012/11/blog-post_22.html

Unknown said...

thavaru yaar seithaalum thavaru thavaru than. thandikka pada vendum..

முரளிதீர தொண்டைமான் said...

எங்கே இருந்து வந்தார்கள் இத்தனை ஊடகங்களும் தலித் அமைப்புகளும்!

இலவசங்களை கொடுத்து மதுவை கொடுத்து இன்றைய இளைஞர்களை சீரழித்து அவர்களை தவறான பாதைக்கு செல்ல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே செய்கின்றது போதுமான தண்ணீர் இல்லை, மின்சாரமில்லை, கல்வி தரமானதாக இல்லை இவைகளைபோன்ற பல இல்லைகள் நம்நாட்டில் உள்ளது தற்பொழுது!

பரதேசிகள் இதுவெல்லாம் கண்ணுக்கு தெரியாத அந்த அறிவுகுருடர்களுக்கு! போங்கடா அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து கொழுத்து வளருகிறீகள் அல்ல அதான் இவ்விதம் செய்யதூண்டுகின்றது அதையும் ஒரு சமுதாயத் தலைவன் ஒருவன் ஊக்குவிக்கின்றான்!

rajah said...

மிகவும் நல்ல பதிப்பு நன்றி...

andrews selvaraj said...

After readiing your blog I have visted some news paper They have shown some photo....

view the link below...Is that wrong info?

http://www.thehindu.com/news/states/tamil-nadu/dmk-factfinding-committee-points-a-finger-at-pmk/anrticle4124002.ece

ஜோதிஜி said...

உங்களுக்கு சில விசயங்களுக்காக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தெளிவாக வெள்ளை பின்புலம் உள்ள இடுகை
எழுத்து பெரிதாக இருந்த காரணத்தால் படிக்க சிரமமாக இல்லை.
இயல்பான தொனியில் எழுதப்பட்ட காரணத்தால் வரிக்கு வரி ஒவ்வொன்றையும் உள்வாங்க முடிந்தது. நன்றி.

நீங்கள் சொல்லியுள்ள சில விசயங்களை நானும் நண்பர்களுடன் பேசும் போது புரிந்து கொண்டேன். உங்கள் அறிமுகத்திற்கு நன்றி. ஒரு வலைதளம் என்பதன் உண்மையான நோக்கம் என்பது ஈழம் சார்ந்த உண்மையான பல விசயங்களை படித்த போது புரிந்து கொள்ள முடிந்தது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு உள்ளூரில் நடக்கும் விசயங்களை அப்படியே உங்களைப் போன்றவர்கள் எழுதும் போது தான் இந்த வலைதளம் என்பதன் அருமையை இன்னோரு முறை உணர்ந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

கூகுள் பள்ஸ் ல் ஏன் இதை பகிரவில்லை. என் அளவில் உள்ள கூகுள் ப்ளஸ் முக நூல் போன்ற அத்தனை தொடர்புகளின் மூலமும் இதை கொண்டு செல்ல விரும்புகின்றேன்.

மீண்டும் நன்றி. மற்றபடி நான் எடுத்துக் கொண்ட தலைப்பில் சொல்ல வந்த விசயம் என்பது முறைப்படியான கல்வி மூலம் மட்டுமே உண்மையான புரிதல் அக்கறை சுதந்திரம் கிடைக்கும் என்பது மட்டுமே.

உங்கள் கட்டுரையை படித்த எனக்கு மேலும் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.

Harish.M said...

வாழ்த்துக்கள் நண்பரே.. இந்த 'இணையதள நெருக்கடி' காலத்தில் இப்படி ஒரு பதிவை எழுதியதற்கு

perumal shivan said...

ungalaipponra oru silaraavathu unmaiyai solla erukkireergale mikka nanri anbare !

பொன் மாலை பொழுது said...

சில நாட்களுகுக்கு முன்பு ஏதோ பிளாக்கில் நிறைய படங்களை வெளியிட்டிருந்தனர். அவைகளை பார்க்கும் பொது திட்டமிட்ட கொள்ளை போன்ற ஒரு உணர்வே வந்தது. உண்மையில் ஒரே படத்தை பல வேறு கோணங்களில் எடுத்திருந்தது புரிந்தது.
இந்த கட்டுரை என்னுடைய பிளசில் சேர்த்துள்ளேன் உங்களின் அனுமதியின்றி. பலரும் உண்மை அறியவேண்டும் என்ற நோக்கத்தில்..எடுத்துக்கொண்ட சிரமும், முயற்சியும் பாராட்டத்தக்கது. நன்றி.

Unknown said...

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் இந்த உண்மையை உலகத்திற்கு தெளிவாக புரியும்படி எடுத்து சொன்னதுக்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி தோழரே மேலும் இணையத்தில் இந்தபதிவு வந்த பிறகு// சவுக்கு ,வினவு இன்னும் எத்தனையோ
பொய் பரப்புறை செய்து கொண்டிருந்தவர்களின் முகம் கிழிக்கப்பட்டு விட்டது தொழார்
மேலும் இந்த கலவரம் தொடர்பான நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டு கிடக்கின்றது
அதையும் வெளிக்கொண்டு இந்த பொய் புரச்சிய்லர்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும் என்பது
எனது தாழ்மையான வேண்டுகோள்

veera said...

எவ்வளவு பெரிய சூழ்ச்சி ... புதிய தலைமுறை நான் அதிகமாக பார்க்கும் சேனலாக இருந்தது..இந்த பார்கவன் குரலை பார்க்கும் வரை ... எவ்வளவு ஒரு கொடுமை !

ஊரான் said...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்துகின்றனர் என்பது தமிழகமெங்கும் தெரிந்த ஒன்றுதான். மற்ற கட்சிக்காரர்களும் இதையேதான் செய்து வருகின்றனர். இவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களை தனிமைப்படுத்திப் போராடும் துணிச்சல் எந்தக்கட்சிக்கும் கிடையாது. எந்தச் சாதிக்கும் கிடையாது. ஓட்டுச்சீட்டு அரசியலின் தன்மையும் சாதிய பிழைப்புவாதிகளின் தன்மையும் ஒன்றிப்போவதால் பாதிக்கப்படுவது எல்லா சாதிகளிலும் உள்ள அப்பாவி மக்கள்தான். இங்கே தலித் பிழைப்புவாதிகளை மட்டும் சொல்லியிருப்பது ஒருதலைபட்சமானது.

திட்டமிட்டு காதலிப்பது, பிறகு பணம் கறப்பது - நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இது ஒரு தொடர் நிகழ்வாக நடக்கிறது என்றால் - அங்குள்ள காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றால்- இதை வெளி உலகுக்குக் கொண்டுவர அப்பகுதியில் உள்ள பிற சாதித்தலைவர்களையும் பாமக உள்ளிட்ட கட்சிகளையும் தடுத்தது எது? இவர்களெல்லாம் ஒடுக்கப்பட்டப் பிரிவினரா? பிற மாவட்டங்களில்-தமிழகத்தின் பிற பகுதிகளில் இக்கட்சிக்காரர்களோ-சாதித்தலைவர்களோ இல்லையா? ஏன் எடுத்துச் செல்லவில்லை? அவ்வாறு எடுத்துச் சென்றிருந்தால் இங்கே நீங்கள் குறிப்பிடும் பல்வேறு சம்பவங்களின் உண்மை நிலை தெரிந்திருக்கும்.
இந்தக் கலியுகத்திலும் உயர் சாதிப் பெண்ணொருத்தி தலித் இளைஞனின் வலையில் தன்னையும் அறியாமல் வீழ்கிறாள் என்பது நகைப்புக்குரியதே! ஒருவன் திட்டமிட்டுக் காதலிக்கிறான் அதுவும் தாழ்த்தப்பட்டவன் என்பதுகூட தெரியாத அப்பாவிகளாகவா பட்டம் படிக்கும் பெண்கள் இருக்கிறார்கள்? நகரம் என்றால்கூட சாதி தெரியாது எனலாம். நாயக்கன்கொட்டாய் போன்ற கிராமங்களில் சாதி தெரியாமலா காதலிக்கிறார்கள்? இயல்பாக எழும் காதலையும்கூட திட்டமிட்ட காதலாக சித்தரிக்கிற போக்கிலேதான் இங்கே சம்பவங்கள் தொகுக்கபபட்டிருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட சாரார் (தலித் அல்லாதவர்களில் ஒரு சிலர்) குறிப்பிட்ட மற்றொரு சாராரால் (தலித் பிரிவில் உள்ள ஒரு சிலரால்) பாதிக்கப்படும் போது அதற்குப் பழிவாங்கும் முகமாக சம்பவங்களுக்கு தொடர்பில்லாதவர்களையும் தாக்குவது வன்கொடுமை இல்லையா? ஒருவன் செய்துள்ளது தவறே என்று எடுத்துக் கொண்டாலும் அவனை தாக்குவததற்கான அதிகாரத்தை மற்றொருவனுக்கு கொடுத்தது யார்? அவ்வாறு தாக்குவதற்கான அதிகாரத்தை தானே எடுத்துக்கொள்வது இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் பொருந்துமா? இல்லை எல்லா பிரச்சனைகளுக்கும் பொருந்துமா?

ஒரு பக்கத்து ‘நியாயத்தை’ மட்டுமே பட்டியலிட்டுவிட்டு மறுபக்கத்தின் பாதிப்பை மிகச்சாதாரண ஒன்றாக சொல்லியிருப்பதன் மூலம் அப்பாவி தலித்துகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.


chandru said...

வன்னிய சாதி வெறியன் இப்படியும் பேசுவானா?

iTTiAM said...

வினவு.காம், சவுக்கு.காம் இரண்டிலும் நான் இட்ட இந்த பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்பட்டு வெளியிடப்படவில்லை.
என்ன காரணம் என தெரியவில்லை.

தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !
[ http://www.vinavu.com/2012/12/07/pmk-ramadoss-castiest-remarks/ ]
ராமதாஸ் திடீர் போராட்ட அறிவிப்பு...
[ http://savukku.net/enavo/1709-2012-11-20-01-16-23.html ]
காதல் டாக்டருக்கு படைப்பாளிகள் பதில்
[ http://savukku.net/pidithadu/1714-2012-12-09-02-40-52.html ]

//2. Girls are atrackted towards jeans wearing dalit youngsters //

Wrong interpretation. What Mr. Ramadoss is saying is, youngsters are trying to attract girls by wearing jeans and doing flashy, freaking things. And the youngsters were in most cases like "Building strong & Basement weak". Means they were not of worth their salt, with out having adequate education/economic back ground to sustain a family and did not feel ashamed of harassing the girls for getting money from their parents.

> And girls getting fooled, or for that matter any body getting fooled is not a very difficult one to understand.

A state like TN where more than 80% literacy rate and atleast claiming to have sufficient common sense and pride is falling prey to the EMU FARM promises - And majority of them are not of those low income/dalit people. Looking at this you can imagine the capability of the so called "uyar jaathi"

இங்கயும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்து உங்க கருத்து / மறுமொழிகளை தெரிவிக்கலாமே.

http://vanjikkapadupavaninkuralgal.blogspot.in/2012/11/blog-post_21.html

நெருப்பில்லாம புகையுமா?

சரியென்றாலும் தவறென்றாலும் இரண்டையும் ஒரு தராசில் நிறுக்கவும்.

திரு. ராமதாஸ் / திரு. காடு வெட்டி குரு ஆகியோர் இப்போது பூனைக்கு மணி கட்ட முயன்றோராகவே பார்க்கப்படுகின்றனர்.

மேலும், இதுவரை பலரும் உள்ளுக்குள் வைத்திருந்ததை, பொதுவில், வெளிப்படையாய் அறிவித்ததே திரு. ராமதாஸ் அவர்களின் நேர்பட பேசப்பட்ட பாராட்டுக்குரிய செயல்.//

sudarmathi said...

மிக அருமையான கட்டுகதைகளை அவித்து விடுவதில் ப ம க நபர்களுக்கு ஈடு அவர்கள் தான் தலித் இளைஞ்சர்கள் மீது குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் மீது இவ்வளவே கைப்புணர்ச்சி இருப்பது நீங்கள் அதரபூர்வம் என்று எழுதியுள்ள இந்த கட்டுரை மீது நம்ப வாய்ப்பு இருந்தாலும், திவ்ய விவகாரத்தில் நீங்கள் சொல்லும் பொய்க்கு ஒரு அளவே இல்லை, எங்கு கற்பழிப்பு, கொள்ளை நடந்தாலும் அதற்க்கு விடுதலை சிறுத்தைகள் அல்லது தலித் இளஞ்சர்கள் என்று காரணம் கூறியுள்ளிர்கள், மன உளைச்சலில் ஒரு பெண் இறந்தே போனால் அதற்க்கு விடுதலை சிறுத்தைகள் பெண்ணின் தந்தை கொன்று விட்டதாக கூறி கண்டன அறிக்கை ஒட்டினார்கள் என்பதில் ஒரு கேள்வி? உண்ணாவிரதம் இருக்கும் ஒரு பெண் எந்த நிலைக்கு சோர்ந்து இருப்பாள் அப்படி சோர்ந்து இருக்கும் பெண்ணை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டுமா வேண்டாமா? பணம் பறிக்கும் சம்பவம் கேள்வி பட்டு திவ்யா தனது தந்தியுடனே வரவே விரும்பினால் ஆனால் காவல் துறையினர் மிரட்டி வரவிடாமல் செய்து விட்டதாக சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி -- தந்தை இறந்த பிறகும் இவ்வளவு அசிங்கம் நடந்த பிறகும் நீதி மன்றத்திலேயே தன கணவருடன் தான் செல்வேன் என்று திவ்யா உங்களை போன்ற பிற்போக்கு பொய்யர்களின் மூஞ்சில் காரி துப்பிய பிறகும் நீங்கள் கூறுவது வேடிக்கை, தலித் இளைஜர்கள் பெண்கள் நடக்கும் பொழுது ஜட்டியை காட்டி காட்டினார்கள் என்பது வடிகட்டிய பொய் தருமபுரி கிருஷ்ணகிரி சேலம் மாவட்டங்களில் தலித் மக்கள் எண்ணிக்கையும் சரி பொருளாதார பலமும் சரி மிகவும் குறைவே, எல்லா நிலைகளிலும் வளர்ச்சி பெற்ற ப ம க ஏன் இந்த கேவலமான போக்கிற்கு காவல் துறையிடம் நியாயம் இல்லை என்றால் நீதி மன்றம் செல்லவேண்டியது தானே ? மூண்டு கிராமங்களை கொளுத்திவிட்டு அதற்க்கு நியாயம் கற்பிக்க ஏதேதொ பொய்களை அவிழ்த்து விடுவது என்பது நல்ல சன நாயகத்திற்கு பொருந்தாது பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அவசியம் அதற்காக குடிசை கொளுத்தும் தொழில் புரிவது கேவலம், விடுதலை சிறுத்தைகளை குற்றம் சொல்வதிலும் உள்நோக்கம் உள்ளது ஏன் என்றால் தலித் மக்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டி ஒட்டு மொத்த தமிழர் நலனுக்காக போராடும் ஒரு இயக்கம் எங்கே தலித்துக்கள் ஆதரவையும் தாண்டி பிற சமூகத்தின் ஆதரவையும் பெற்று விட போகிறது என்று ராமதாஸ் எடுத்து இருக்கும் சாதி அஸ்திரம் தான் தலித் இளைஞ்சர்கள் கூலிங் க்ளாஸ், த சர்ட், ஜீன்ஸ் பெண்டு போட்டுகொண்டு பிற சாதி பெண்களை மயக்கி பணம் பறிக்கிறார்கள் என்கின்ற வாதம், என்னுடைய கேள்வி எல்லாம் இந்த த சர்ட்டுக்கும், கூலிங் கிளாசுக்கும், ஜீன்சு பேண்டுக்குமா பிற சமூக பெண்கள் மயங்கி விடுகிறார்கள் இது பென்னினைத்தையே கேலி செய்யும் விதம் அல்லவா? அது மட்டுமல்ல ராமதாஸ் தனது இலஞ்சர்களுக்கு இது எல்லாம் போடும் தகுதி கூட இல்லை என்று நினைக்கிறாரா? உண்மையிலேயே பாலியல் உணர்வால் எல்லா இளைஜர்களும் தூண்ட படுவது வழக்கம் எத்தனை தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு மான பங்க படுத்தபட்டுல்லார்கள் அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தலைவர் ஒரே ஒரு காதல் திருமணத்தை மையமாக வைத்து ஒரு மாபெரும் சமூகத்தையே இழித்து பேசி வருவது அதற்க்கு அங்கே அதை செய்தான் இங்கே இதை செய்தான் என்று எங்கெங்கு எல்லாம் நடக்கும் கொலை கொள்ளை கற்பழிப்பு பெண் கடத்தல் அனைத்தையும் விடுதலை சிறுத்தைகள் மீதும் தலித் இளைஜர்கள் மீது திணிப்பது அழகு அல்ல, எல்லா செயல்களிலும் சி பி ஐ கவனித்து கொண்டு தான் உள்ளது அப்படி, மாற்று சமூக மக்களிடம் மட்டுமல்ல, வன்னிய பெருங்குடி மக்களிடமும் விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவு பெருகத்தான் போகிறது சாதி ஒழியும் அன்று அந்த களத்தில் நின்றவர்களின் வரலாறு மட்டுமே இடம்பெறும்.

Inquiring Mind said...

Some one has translated your article in to english, which i saw in the below article..

http://bharatkalyan97.blogspot.in/2012/12/dharmapuri-incident-unravels-distorted.html

Inquiring Mind said...

@sudarmathi,

இங்கு எல்லாருமே பிற்போக்குவாதிகள்தான்.. (காலையில் பின்னால்தான் போகின்றனர்) .. உங்களை போன்றவர்கள்தான் பின்னால் போக வேண்டியதை முன்னால் கக்கிக் கொண்டிருக்கீக..

பண்ற அயோக்கியத்தனத்தையும் பண்ணிட்டு, அதை நியாயப்படுத்துவது பொறுக்கித்தனம்..

திவ்யாவை மயக்கி கூட்டி போய், வேண்டிய வரை அனுபவித்துவிட்டு, பின்னாடி அப்பங்காரனிடம் பணம் பறித்தது, உங்கள் அகராதியில் முற்போக்குத்தனம்..

இதில் என்ன கொடுமை என்றால் சாதாரண தலித் மக்கள் இதில் பலி கடா ஆகியிருப்பதுதான்.. தலித் என்ற போர்வையில் தலித் அமைப்புகள் செய்யும் அட்டூழியங்களுக்காக, எல்லா தலித் மக்களுக்கும் ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியதுதான் இவர்களின் சாதனை..

notyet said...

நீங்கள் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தாழ்த்தபட்டவர்கள், பிற்படுத்தபட்டவர்கள் (தலித், வன்னியர்) ஆகிய சமுகங்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியலில் வளர்ந்துவிட்டால் பிறகு மேல்தட்டு சமுகங்கள் இந்த தமிழ்நாட்டை எப்படி மது, இலவசம், சினிமா போன்றவற்றை கொடுத்து கொள்ளையடிக்க முடியும் ??

இதற்கு ஊடகங்கள் மற்றும் விதிவிலக்கா என்ன ?? அவர்களும் அவர்கள் பங்குக்கு தங்களது கைவரிசையை ஊடகத்தின் முலமாக காட்டுகிறார்கள்.
ஆனால், இதற்கு எல்லாம் கண்டிப்பாக பதில் செல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் .. வரும்.

Unknown said...

Anna ungal padhivu unmai enru 100%poiyGave padhivu seidhu ullirgar

Karthi Keyan R said...

vaniyaandaaa.........